நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி கள்ளக்காதலியிடம் மிரட்டல் - கள்ளக்காதலன் உட்பட 4 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட போகலூர் ஒன்றியம் வீரவனூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் (28) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரஷப் நிஷா(32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தினேஷ் கள்ளக் காதலியை கொடைக்கானலுக்கு சுற்றுலா கூட்டிச் சென்று அங்கு இருவரும் தனிமையில் இருந்ததை ஆபாச வீடியோ மற்றும் படம் எடுத்து வைத்துள்ளார். வீடியோ, படம் எடுத்தது தெரியாமல் அந்த கள்ளகாதலி இவருடன் தொடர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்காதலியிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார் கள்ளக்காதலன். ரஷப் நிஷா நான் எதற்கு உனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்பொழுதுதான் அவர் ரஷப்நிஷாவிற்கு கேமராவில் எடுத்த படம் வீடியோக்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஷப்நிஷா என்ன செய்வது என தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
அதோடு நிற்காமல், அதன்பிறகும் கள்ளக்காதலன் தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் ஆபாச காட்சிகளை பரப்பி உள்ளார். இதனை அறிந்த ரஷப் நிஷாவின் கொழுந்தன் ராஜேஷ் கண்ணன் நேரடியாக தினேசை பார்த்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து ரஷப் நிஷாவின் கொழுந்தனை செங்கல் கல்லால் தலையில் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ரஷப் நிஷாவின் கொழுந்தன் ராஜேஷ் கண்ணன் சத்திரக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தினேஷ் உட்பட உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இது போன்று அப்பாவி பெண்களை குறிவைத்து ஆபாச படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி பணம் கேட்டு மிரட்டும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு ஆணும் பெண்ணும் கள்ள உறவு வைத்துக் கொள்வதால் அவர்களுக்கு வேண்டுமானால் சிற்றின்பம் கிடைக்கலாம். ஆனால் அவர்களை சார்ந்து இருக்கும் உற்றார், உறவினர்கள் கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் சமூகத்தில் தலைகுனிந்து நடக்கும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.