இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி செம்பேடு ஆதிதிராவிட கிராம மக்கள் கோரிக்கை
ஆற்காடு அடுத்த செம்பேடு கிராமம் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது எங்களுக்கென்று சொந்த வீடோ, நிலமோ, கிடையாது தினமும் கூலி வேலைக்குச் சென்று பிழைத்து வருகிறோம் நாங்கள் நத்தம் புறம்போக்கு மனையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம் எனவே நாங்கள் வீடு கட்டும் வாழ்ந்து வரும் நத்தம் புறம்போக்கு மனைக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.ண