ராணிப்பேட்டை சிப்காட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் திருமலை கெமிக்கல் கம்பெனி எதிரே உள்ள தனியார் ஓட்டலில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள்
எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் தலைமை ஏற்று நடத்தினார்
தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர் எம் சந்தோஷ் குமார் மற்றும் தேர்தல் ஆலோசகர் கோவை நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைமை தேர்தல் குழு உறுப்பினர்களான டாக்டர் அனுஷா ரவி, ஊடகப் பிரிவு பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் எச்.ராதா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் டாக்டர் அனுஷ ரவி பேசுகையில்
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் என்னை ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் குழு தலைவராக நியமனம் செய்திருக்கிறார் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நமது கட்சியின் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கின்றனர்
கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையான மக்கள் நமக்கு வாக்களித்திருப்பதே அதற்குச் சான்று அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட தலைவர் நமக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார் எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விருப்பமுள்ளவர்கள்
தங்களின் பெயர்களை பதிவு செய்தபிறகு தலைவரின் மூலம் வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்
மேலும் கட்சியின் வளர்ச்சி பணி குறித்து பேசிய அவர் மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளைகளை கட்டமைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களானஎன்.இளைய குமார்,ஆர்.மல்லிகா,என்.சந்தோஷ் குமார்ஏ.சின்ன துரை, சுதாகர் கட்சி நிர்வாகிகளான அமலா தியாகராஜன்,ஆர்.தயாநிதி, சிப்காட் சதீஷ்குமார், மருதபாண்டி, அஜித் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.