விசிக கட்சியினர் ராணிப்பேட்டையில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா

 


ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விசிக சார்பில்  நகர செயலாளர் ராஜசேகர் தலைமையில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது 

இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் குண்டா சார்லஸ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு   வழங்கினார் 

அதனைத் தொடர்ந்து    தந்தை பெரியாரின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் சமூக நீதியை நிலை நாட்ட பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் அதனைத் தொடர்ந்து நகர செயலாளர் ராஜசேகர் பேசுகையில்

 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா விடுதலை சிறுத்தைகளாகிய நாம் முன்னெடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் தந்தை பெரியாரின் கொள்கை கோட்பாடுகளை உள்வாங்கி

 


பெண்ணுரிமை பாதுகாக்கவும், தீண்டாமையை ஒழிக்கவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு பெரியாரின் கனவை நனவாக்க சமூகநீதியை  நிலைநாட்ட  வேண்டும் என்றார்

 மேலும் இந்த நிகழ்ச்சியில் ரமேஷ் கர்ணா மாந்தாங்கள்  ராஜா, ராமச்சந்திரன், அருள் ஈஸ்வரன், பிரபுதாஸ் ,அரி, சுரேஷ், ரஞ்சித் செந்தில் சிவா  ஆகியோரும் பொதுமக்களும் ஏராளமான விடுதலை சிறுத்தைகளும் கலந்துகொண்டு இந்த  நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்