குத்தாட்டம் போட்ட பள்ளி ஆசிரியைகள் வீடியோ வைரல்; பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!

 உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் சந்தன் எனும் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில், காலியான பள்ளி வகுப்பறையில் ஐந்து ஆசிரியைகள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து உத்தரபிரதேச மாநில போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் 5 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீசுக்கு ஆசிரியர்கள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. விளக்கம் திருப்தியாக இல்லாதத நிலையில், அடிப்படை கல்வி துறையால் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஐந்து பேரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிசோடியா, ரேஷ்மி, ஜீவிகா குமாரி, அஞ்சலி யாதவ், சுமன் குமாரி, சுதா ராணி ஆகிய ஐந்து ஆசிரியர்கள் 'மைனு லெகெங்கா லேடா மேக்னா' என்னும் புகழ்பெற்ற சினிமா பாடலுக்கு நடமாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதற்கென பிரத்யேகமாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு பணியாளர்கள் வரைமுறைகள் 1978 ஐ மீறியதற்காகவும், அனைவரும் கல்வி பெறும் உரிமையின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆக்ராவில் குத்தாட்டம் போட்ட பள்ளி ஆசிரியைகள் வீடியோ வைரல்; பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!


"அந்த ஆசிரியர்கள் நடனமாடிய பாடலோ நடனமோ கல்வி கற்பிப்பதற்கானதாக தெரியவில்லை, வகுப்பறையில் நடனமாடியதான் மூலம், ஆசிரிய சேவையின் விதிகளை மீறியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி கல்வித்துறையின் பெயரில் களங்கம் விளைவித்திருக்கிறார்கள், அந்த பகுதியினருக்கு பள்ளியின் மீது வெறுப்பு வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்" என்று ப்ரஜ்ராஜ் சிங் பணியிடை நீக்க அறிக்கையில் எழுதியுள்ளார். இந்த விடியோவானது இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. அந்த பள்ளியின் ப்ரின்சிபல் தினேஷ் சந்த் பரிஹார் கூறியதாவது, "தகாத நடவடிக்கைகளாலும், துறைக்கு காலங்கம் விளைவித்ததாலும், அரசு பணியாளர்கள் சட்டம் 1978 யும், அனைவருக்கும் கல்வி சட்டத்தையும் மீறியதற்காகவும் இந்த ஐந்து பேரையும் பணியிடை நீக்கம் செய்கிறோம்" என்று கூறியுள்ளார்.


ஆக்ராவில் குத்தாட்டம் போட்ட பள்ளி ஆசிரியைகள் வீடியோ வைரல்; பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!


இதேபோல் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே பாலிவூட் பாடலுக்கு நடனம் ஆடிய இளம்பெண் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால், இளம் பெண் மீது ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காக ராமர்-சீதா கோவிலின் வெளியே நடனமாடியதாக பஜ்ரங்தள் தலைவர் புகார் அளித்ததை அடுத்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்