கடைகளில் மாமூல் கேட்டு உரிமையாளர் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சியால் சிக்கிய கும்பல்!!
புதுச்சேரி : மாமூல் கேட்டு துணிகடை உரிமையாளரை தாக்கும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று மாமூல் கேட்டு பாத்திரகடை உரிமையாளரரை இளைஞர்கள் சிலர் தாக்கிவிட்டு சென்றனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் ராஜ்குமார் பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் காட்சிகளை கொண்டு கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த கருணா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் அன்றைய தினமே அதே இளைஞர்கள் சின்ன சுப்புராயபிள்ளை வீதியில் உள்ள ஒரு துணி கடையிலும் மாமூல் கேட்டு கடையின் உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடிய போலீசார் கருணா மற்றும் அவரது கூட்டாளிகளான 4 பேரை கைது செய்தனர்.