தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, 45-வது GST கூட்டம் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. சுமார் 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பும் இந்த கூட்டத்தில் நடந்தது.
இந்த முக்கிய கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகின. ஆனால், தமிழக நிதி அமைச்சர் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, இக்கூட்டத்திற்கு செல்லாமல் தவிர்த்து விட்டார். இது தமிழக மக்களிடமும், எதிர்கட்சியிடமிருந்தும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுகுறித்து தி.மு.க எம்.பி-யும் மூத்த தலைவருமான TKS இளங்கோவன் நேற்று ஆங்கில தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் "நிதி அமைச்சர் இந்த கூட்டத்திற்கு கண்டிப்பாக சென்று இருக்க வேண்டும். ஏன் செல்லவில்லை என்று தெரியவில்லை.தி.மு.க-வின் உட்கட்சி பூசல் அப்பட்டமாக பொது வெளியில் அரங்கேறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு ஒரு முற்றுப்புள்ளி வைப்பாரா என அறிவாலய வட்டங்கள் எதிர்பார்க்கின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களையும் கவனித்து வருகிறார். அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். பழனிவேல் தியாகராஜனுக்கும் அவர் அறிவுரை வழங்குவார். எதிர்கட்சிகள் என்றால் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அதை நாம் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
எங்கள் கட்சி தலைமை, பிடிஆர் பேசுவதை கவனித்து வருகிறார். ஏற்கனவே இது குறித்து ஒரு முறை அறிவுரை வழங்கியுள்ளார், இனி மேல் இது போன்ற சம்வங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அவர் மீண்டும் அறிவுரை வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.