கோடியில் புரளும் டாஸ்மாக்கால் தமிழக அரசுக்கு நஷ்டமா? ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழக அரசுக்கு வருவாய் தரக்கூடிய டாஸ்மாக்கில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 312.43 கோடி நஷ்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் பெரும் வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டத்திற்கும், வசூலிற்கும் பஞ்சம் இருக்காது.
ஆனால் நமக்கு தெரியாத ஒரு தகவலும் தற்போது உறுதியாகியுள்ளது. பழனியை சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் அண்டு வரை டாஸ்மாக் நஷ்டத்தொகை பற்றிய வருடாந்திர தகவலை கோரியுள்ளார்.
அவருக்கு தமிழ்நாடு வாணிப கழகம் நஷ்டத்தை குறிப்பிட்டு தகவல் அனுப்பியுள்ளது. அதில் ஆறு ஆண்டுகளில் டாஸ்மாக்கில் ரூ.312.43 கோடி என்றும், 2015 – 2015 ஆம் ஆண்டு மட்டும் ரூ.67.61 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கால் தமிழக அரசுக்கு வருவாய் அதிகம் கூடுகிறது என்று தான் நினைத்திருப்போம் ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உள்ள தகவல் சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.