அமைச்சர்கள் பயப்படுகிறார்களா…? அண்ணாமலை மீது பாய்ந்த திருமா., ஈஸ்வரன்..!
சமீபகாலமாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை விமர்சித்து பேசுவது குறிப்பாக, நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோரை குறிவைத்து அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளைக் கூறுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜிஎஸ்டி கூட்டம் புறக்கணிப்பு
முதலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக, மத்திய அரசை தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கடுமையாக விமர்சித்தபோது, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தமிழக அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?… இதுதொடர்பாக லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் நேரடியாக கலந்துகொண்டு தனது கருத்தை தெரிவிக்க தவறிவிட்டார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இதில் கலந்து கொள்ளாததற்கு மதுரையில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக் கொண்டிருந்தேன், என்று நிதியமைச்சர் முதலில் காரணம் கூறினார். பிறகு என்னால் சிறிய விமானங்களில் பயணம் செய்வது இயலாது. லக்னோ போக வேண்டுமென்றால் இரண்டு மூன்று விமானங்கள் மாறிச் செல்லவேண்டும் என்று ஒவ்வொரு காரணமாக அவர் கூறிக்கொண்டு போனது திமுகவினருக்கே சற்று எரிச்சலை ஏற்படுத்தியது.
அண்ணாமலை மோதல்
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ந்து ட்விட்டரில் சண்டையிட்டு வந்த அமைச்சர் தியாகராஜன், இந்த விவகாரம் அப்படியே நீண்டு கொண்டே போவதை விரும்பாமல் பின்னர் அப்படியே விட்டுவிட்டார்.
5 சதவீதத்துக்கும் கொரோனா பரவல் குறைவாக உள்ள மாநிலங்களில் வழிபாட்டு தளங்களை திறக்க எந்தத் தடையும் இல்லை என்று கூறியிருப்பதை சுட்டிக் காண்பித்தார்.
இதனால் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதலே அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு விட்டது. இது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி என்று பரவலாக பேசப்பட்டது.அடுத்து செந்தில் பாலாஜி
அதன்பிறகு தமிழக மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் 4 ரூபாய் 50 காசுக்கு வாங்க வேண்டிய ஒரு யூனிட் மின்சாரத்தை தனியாரிடம் 20 ரூபாய்க்கு வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை வைத்தார்.மேலும் மின்சாரம் தயாரித்துக் கொடுத்த தனியார் நிறுவனங்களுக்கு பாக்கியை வரிசைப்படி தராமல் 4 சதவீத கமிஷனை பெற்றுக்கொண்டு இடையில் உள்ளவர்களுக்கு பணத்தை கொடுத்ததாக ஒரு பரபரப்பு புகாரையும் கூறினார். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே டுவிட்டரில் ஒரு யுத்தமே நடந்தது. ஒருவருக்கொருவர் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி தாக்கிக் கொண்டனர். நான் சொன்னது தவறு என்றால் அமைச்சர் என் மீது வழக்குத் தொடுக்கலாமே என்று அண்ணாமலை கிடுக்குப்பிடி போட்டார்.
ஸ்வீட்டில் முறைகேடுஅதைத்தொடர்ந்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட் வாங்க டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது அண்ணாமலை குற்றம்சாட்டினார். 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனம் மட்டுமே டெண்டரில் கலந்துகொள்ள முடியும் என்கிற கடும் நிபந்தனையை விதித்து சிறிய நிறுவனங்கள் பங்கேற்க முடியாதபடி தடுத்துவிட்டனர். 100 டன் ஸ்வீட் வாங்க 30 சதவீத கமிஷன் பேரம் பேசப்பட்டுள்ளது என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறினார்.
இந்த நிலையில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்திலேயே இனிப்புகளை வாங்கவேண்டும் என்ற ஒரு உத்தரவு கடிதத்தை தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதியிருக்கிறார். ஆக ஒருவழியாக தீபாவளி ஸ்வீட் பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது.இதையடுத்து “இந்த அரசு ஊழலை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு அமைச்சரின் ஊழல்களையும் வெளியே கொண்டு வருவோம். எங்கள் மீது கை வைப்போம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அப்படி வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும்” என்று அண்ணாமலை காட்டமாக கூறினார்.
பலவீனத்தைக் காட்டுகிறதுஇது திமுகவை மட்டும் அல்ல, அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொதித்துப்
போன திருமாவளவன் எம்பி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “தாங்கள் அரசியலில் இருப்பதை மக்களிடம் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக வாயில் வந்ததையெல்லாம், பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உருப்படியான அரசியல் எதையும் பேசுவதில்லை. தனிநபரை விமர்சனம் செய்வதன் மூலம் அனைவரும் தங்களை கவனிக்கவேண்டும், தங்களை பற்றி விவாதிக்கவேண்டும் என்ற உளவியலை கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது” என்று அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் ஜாடையாக குத்திக் காட்டினார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், “தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட வேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார். இந்த எண்ணம் அவரை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லப் போவதில்லை. முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் வளர வேண்டியவராக இருப்பதால் சொல்ல வேண்டிய கருத்தை நாகரீகமாக சொல்லவேண்டும் “என்று குறிப்பிட்டார்.கவலைப்பட தேவையில்லைஇதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “இரு தரப்பிலுமே வார்த்தை யுத்தம் மிகக் கடுமையாக உள்ளது. அது எல்லை மீறி சென்று விட்டது என்று கூட சொல்லலாம். அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் திமுக அரசு மீது பழி சுமத்தக் கூடாது அப்படி அவர் தொடர்ந்து கூறி வந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அதற்குத்தான் வட்டியும் முதலுமாக நாங்களும் திருப்பித் தருவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.இதேபோல், அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூடத் தெரியாது தலையில் களிமண் மட்டும்தான் உள்ளது. அரைவேக்காட்டுத் தனமாக ஆதாரம் இல்லாமல் கண்டபடி உளறுகிறார். அவருக்கு மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை என்று முதலில் தாக்கிய செந்தில்பாலாஜி அடுத்து அண்ணாமலை சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுவராக இருந்தால் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று வார்த்தைகளில் கடுமை காட்டினார்.
சமய அறநிலையத்துறைக்கு கெடு விதித்தார்இந்த மோதல் அமைச்சர்கள்- தமிழக பாஜக தலைமை என்கிற ரீதியில்தான் நடந்து வருகிறது. திமுக -பாஜக இடையேயான இந்த சண்டைக்குள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனும் ஏன் தலையிடுகிறார்கள், கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது அரசியலில் சரியான அணுகுமுறையும் அல்ல. மேலும் அமைச்சர்களால் அண்ணாமலைக்கு சரியாக பதில் கூறமுடியவில்லை. பயப்படவும் செய்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் வருகிறோம் என்று சொல்வதைப்போல் இது உள்ளது. இப்படி இரு கட்சிகள் மோதிக்கொள்ளும் விஷயத்தில் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து கொள்வது புதுமையாகவும் உள்ளது.அதுவும் ஈஸ்வரன், அதிமுகவை அழித்துவிட்டு எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட வேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார் என்று கூறுகிறார். தேவையின்றி இந்த விஷயத்தில் இவர் மூக்கை நுழைப்பதுடன் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே சண்டையை மூட்டி விட பார்க்கிறார். அதாவது திமுக-பாஜக கட்சிகளுக்கு இடையே இருக்கும் மோதலை கூட்டணி கட்சிகளின் அரசியல் பிரச்சினையாக மாற்ற ஈஸ்வரன் முயற்சிப்பது அப்பட்டமாக தெரிகிறது.