கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்.. சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!

 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்  உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் தலைமையில் தாண்டிக்குடி காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் பத்து காவலர்கள் கொண்ட தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை செய்யப்பட்டது.

இதையடுத்து கொடைக்கானல் மலை அடிவார சோதனைச் சாவடி மற்றும் மலைச் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை செய்யப்பட்டது. இப்பதிவில் சந்தேகப்படும் படியாக கொடைக்கானலுக்கு சென்று பாதி வழியிலேயே திரும்பி வந்த சைலோ கார் எண் TN18F300  வாகனம் சம்பந்தமான விசாரணை மேற்கொண்டனர். இந்த வாகனத்தின் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கார் நம்பர் விபரங்கள் குறித்து விசாரித்ததில், 



கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!


கார் நம்பர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தது என கண்டறிந்து ,தாண்டிக்குடி காவல் துறையினர் புதுக்கோட்டை காவல் துறையினரை  தொடர்பு கொண்டு கார் நம்பரை கொடுத்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர், காரின் உரிமையாளர் ஜெகனை(34) விசாரணை செய்ததில் முன்னுக்கு பின்னாக பதிலளித்தும்,கொடைக்கானல் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலிசாரின் தீவிர விசாரணை செய்ததில்  ஜெகன் தனது பெற்றோர் உதவியுடன் தனது அண்ணன் செல்லத்துரை காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!


புகாரின் மீது சந்தேகம் அடைந்த தாண்டிக்குடி காவல் துறையினர் புதுக்கோட்டை விரைந்து ஜெகன் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை செய்தனர்.  இந்த விசாரணையில் கொடைக்கானல் செல்லும் வழியில் கிடந்த சடலம்  கொலை செய்யப்பட்டு இறந்தவர் செல்லத்துரை(37) என்பதும், இவர் ஜெகனின் அண்ணன் என்பதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்டு இறந்த செல்லத்துரை மன நலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படுகிறது.  போதை பழக்கத்திற்கும் அடிமையாகி வீட்டில் உள்ளவர்களை அதிகம் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்  சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து  சென்ற ஜெகனும் தாயார் ராஜம்மாளும்  செல்லத்துரையை கொன்று விட்டு கொடைக்கானல் மலை பகுதிகளில் வீசி வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது.


கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!


கடந்த 6ஆம் தேதி  செல்லத்துரைக்கு தாயார் ராஜம்மாளும் ஜெகனும் மது வாங்கி கொடுத்து அதிக போதை ஏறிய நிலையில் சுயநினைவு இழந்தவுடன் தந்தை திவ்யாநாதன்(75) உதவியுடன் ஜெகன் வைத்திருந்த சைலோ காரில் ஏற்றி வந்து காரின் பின் இருக்கையின்  உள்ளே இருந்த இரும்பு ராடின் மூலம் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலமாக அடித்து கொலை செய்து, செல்லத்துரையின் இரண்டு கைகளை கட்டி கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் வாழைகிரி அருகே சாலையின் ஓரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் தள்ளிவிட்டு கற்களை செல்லத்துரை முகம் மற்றும் உடல் மீது வீசி சிதைத்து விட்டு அதே சைலோ காரில் புதுக்கோட்டை பகுதிக்கு திரும்பி  சென்றது விசாரணையில் தெரியவந்தது.


கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!

மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய இறந்த செல்லத்துரையின் தாய், தந்தை, தம்பி ஆகிய மூன்று நபர்களை தனிப்படையினர் திருமயத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு ராடு மற்றும் சைலோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 


கொலை செய்வதற்காகவே கொடைக்கானல் டூர் சென்ற குடும்பம்..  சிசிடிவியால் துப்புதுலக்கிய போலீசார்..!


மேலும் இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு நான்கு நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்