இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 6.09.21அன்று 3 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து மீதமுள்ள நான்கு ஒன்றியங்களுக்கு
அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், இரண்டாம் கட்டமாக 9.10.21 சனிக்கிழமை அன்று ஊரக உள்ளாட்சி சாதாரன தேர்தல் அதன் முற்பகல் 7 மணி முதல் துவங்கி பிற்பகல் 6 மணி வரை நடைபெற உள்ளது
வாக்காளர்கள்
இரண்டாம்கட்ட தேர்தலுக்கு1,80,864,வாக்காளர்களும் 1,87,537 பெண் வாக்காளர்களும் 25 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் வேணாம் மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 426 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
வாக்குச்சாவடிகள்
தேர்தலுக்காக
250 ஒரு வார்டு வாக்குச்சாவடி மற்றும் 477 இரு வார்டு வாக்குச்சாவடிகள் என மொத்தமாய் 757 வாக்குச்சாவடிகளுக்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
பதவி இடங்கள்
இத்தேர்தலில் கீழ்காணும் 1469 இடங்களில் 309 பதவிடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ஏனையை 1160 பதவிடங்களுக்கு 3377 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியுள்ளனர்
தேர்தல் கண்காணிப்பு
மேற்படி தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு மொத்தம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 555 வாக்குச்சாவடி மையங்களில் 66 மையங்களில் வித் ஸ்டீமிங் வசதியும் 66 மையங்களில் வீடியோகிராபி வசதியும் 630 மையங்களில் சிசிடிவி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது
கூடுதலாக 40 வாக்குச்சாவடி மையங்களில் நூல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேர்தலின்போது அனைத்து முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளவும் கண்காணிக்கும் ஒரு வாக்குச்சாவடிக்கு இரு நபர்கள் வீதம் 1514 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர் மேலும் ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு 13 கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை உபகரணங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதுஎன தெரிவித்தார்.