புதுச்சேரியில் சிறையில் உள்ள நண்பருக்கு பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா வைத்து கொடுத்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மத்திய சிறைச்சாலை காலாப்பட்டில் அமைந்துள்ளது.இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த அஜித் என்பவர் வழக்கு ஒன்றிற்காக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை சிறையில் சந்திப்பதற்காக முன் அனுமதி பெற்று அவரது நண்பர்களான அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோர் சென்றனர்.அவருக்கு கொடுக்க இரண்டு பிஸ்கட் பாக்கெட்களை எடுத்து சென்றனர்.
இதனை சிறை வார்டன்கள் பிரித்து பார்த்த போது பிஸ்கட்டுகளுக்கு நடுவில் சிறிய சிறிய கஞ்சா பாலீத்தீன் பைகளில் மடித்துவைத்து இருப்பது தெரிய வந்தது.
இதனை காலாப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் பல முன் எடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சிறைக்கைதிகள் மற்றும் அவர்களது
குடும்பத்தினருக்கு மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான ஆதரவை வழங்குவதற்காக ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டியின் முயற்சியே முன் மாதிரி சிறைச்சாலை திட்டம் (புதியநம்பிக்கை).
அதன் ஒரு அங்கமாக வீட்டு அலங்காரப்பொருட்கள் தயாரிப்பு பிரிவுதுவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கைதிகளுக்கு சிறையில் கிடைக்கும் ஊதியம் மட்டுமல்லாது, கூடுதல் பணம் சம்பாதிக்க உதவும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பயிற்சியின் மூலம் சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பிறகும் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திறன்களைக் கற்றுத்தருகிறது.

கைதிகள் தயாரித்த வீட்டு அலங்கார பொருட்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டியின் அரவிந்தோ சொசைட்டியின மூலமாக கடைகள் மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் கிடைக்கும் தொகை அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்காக அளிக்கப்படும்.
இந்த பயிற்சிகள் மூலம் கைதிகள் அவர்களது தன்னம்பிக்கை மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், ஆன்மீக வழியில் அவர்களின் மனதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும்.இந்த முன்மாதிரி சிறைச்சாலை திட்டம், கைதிகளுக்கு மட்டுமல்லாது சிறை ஊழியர்களின் திறனை வளர்ப்பது குறித்தும், அவர்களின்குடும்பங்களுக்கும் திறன்

மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளையும் வழங்க உள்ளது.
குற்றத்தின் தீர்வு தண்டனை மட்டுமல்ல மறுவாழ்வு என நோக்கில் புதுச்சேரி சிறைச்சாலை செயல்பட்டாலும் சிறைக் கைதிகளுக்கு செல்போன்,சிம்கார்டு,போதை பொருட்கள் போன்றவை வழங்குவதை முற்றிலும் தடுக்க முடியவில்லை.வாரம் ஒருமுறையாவது இப்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் சிக்குகிறது என்பது வேதனையே..