வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட குழந்தை - பத்திரமாக மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் நிதின் - சிந்து தம்பதியினர் தங்களது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் அழகியமண்டபம் அடுத்த பிலாந்தோப்பு பகுதியில் வசித்து வருகிறனர். இந்நிலையில் இன்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வேலைக்குச் சென்ற தனது கணவர் நிதினை வழியனுப்ப சிந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத வீட்டின் முன்பக்கக் கதவு தானாக மூடி லாக் ஆகிக் கொண்டது. இதனால் வீட்டினுள் கைக்குழந்தை மாட்டிக் கொண்ட நிலையில், சிந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் தக்கலை தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர்.
இதைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.