புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா : திருச்சி என்ஐடியில் பரபரப்பு…
திருச்சி: திருச்சி என்ஐடியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ஒமிக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பரவ தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் துவாக்குடியில் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் வெளியூரிலிருந்து படித்துக்கொண்டிருக்கும் பல்வேறு மாநில சேர்ந்த மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற பிரக்டிகல் வகுப்புக்காக 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்தனர். இங்கு வரும் மாணவர்கள் தொடர்ந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து தான் அனுமதிப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இன்றும் வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பரிசோதனையில் 10 மாணவர்ளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒமிக்ரான் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய மரபணு மாதரிகள் பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 10 பேரும் வௌிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.