சாலையில் சண்டையிட்டுக் கொண்ட பள்ளி மாணவர்கள்
மதுரை மாவட்டம் ஆத்திக்குளம் ரிசர்வ் லைன் பகுதியில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் பள்ளி சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்கள் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள கடை வாசல் முன்பாக கடுமையாக தாக்கிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீருடை இல்லாமல் சாதாரண உடையில் இருக்கும் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் ஏற்கனவே பள்ளி மாணவிகள் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவத்தால் மாநகராட்சி கல்விக்குழு விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்கள் கடுமையாக தாக்கிக் கொள்ளும் இந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தல்லாகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.