தேனி மாவட்டம் காவல்துறையின் அதிரடி வேட்டையில் 62 கிலோ கஞ்சா சிக்கியது
தமிழகம் காவல்துறை தலைமை இயக்குனர் திரு.டாக்டர். C. சைலேந்திரபாபு .அவர்கள் தமிழகத்தில்முழுமையாக கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்று தமிழகம்காவல்துறைக்குஉத்தரவுபிறப்பித்தார்.அதன்நடவடிக்கையாகதேனிமாவட்டம்மாவட்டம்கண்காணிப்பாளர்
திரு. டோங்ரே பிரவீன் உமேஷ் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் துணைகண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா அவர்களின் தலைமையில் தேனி மாவட்டத்தில் முழுமையாக கஞ்சா ஒழிப்பு மற்றும் போதைப் பொருட்களை பற்றி விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. அதன் அடிப்படையில் கம்பம் உத்தமபாளையம் சுற்றுபகுதிகளில் அதிரடி சோதனை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் திரு.சிலைமனி அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. திவான்மைதீன் அவர்கள் காவலர்கள் ஆகியோர் ஓடைப்பட்டி
வெள்ளையம்மாள்புரம் பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அவ்வழியில் வரும் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் கம்பம் K.K.பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவரிடம் இருந்து சுமார் 22 கிலோகிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அடுத்த கட்ட விசாரணையில் கூட்டாகச் சேர்ந்து ஆந்திரம் மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து அதிக விலைக்கு கேரளா மாநிலம் சென்று விற்பனை செய்வதாக வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில்
அதே பகுதியை சேர்ந்த முரளிதரன்.விஜயன்.சரத் ஆகியோரை கைதுசெய்து மொத்தம் 62 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றினர். அவர்களுக்கு கஞ்சா கொண்டு வந்து கடத்துவதற்கு உதவியாக இருந்த NTபட்டி கணேஷன்
KK பட்டி அருண்பாண்டி ஆகியோர் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலிசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். தொடர்ந்து கஞ்சா சோதனையில் அதிரடி காட்டி வரும் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் திரு.சிலைமனி அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.திவான்மைதீன் அவர்கள் மற்றும் காவலர்களை தேனிமாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்ரே பிரவீன் உமேஷ் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.ஸ்ரேயா குப்தா .அவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெகுவிமர்சையாக பாராட்டி வருகின்றனர்- வே.பிரசாத் குமார் தேனி