ஆர்கேநகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கத்தியுடன் சுற்றிய 5 பேர் கைது!
சென்னை ஆர்கேநகர் பகுதியில் இருந்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்களால் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஊர்வலத்தின் போது மது அருந்தி விட்டு கத்தியுடன் சுற்றிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ஊர்வலாமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஊர்வலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை வைத்து கொண்டு 5 இளைஞர்கள் தங்களுக்குள்ளேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்களின் அட்டகாசத்தை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் ஆர்கே நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் நாகேந்திரன், தமிழ்செல்வன், ஆனந்த், இம்ரான், சம்மையா என தெரியவந்தது. தொடர்ந்து ரவுடிகள் போல் ஊர்வலத்தில் கத்தியுடன் உலா வந்ததை உறுதி செய்ததையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: அசோக்குமார், சென்னை