நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் : 5 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பள்ளி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து நக்கீரன் இதழினி செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு செய்தி கேரித்துவிட்டு திரும்பி வந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவர்களை வழிமறித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்கள் சென்ற காரை சேதப்படுத்தியதோடு, பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். அதில், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள்நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்-வைகோ கண்டனம் கடும்பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: எம்எல்ஏ வேல்முருகன் கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க ஆட்சியில் ஊடகத்துறையினர் தொடர்ந்து மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது என்றும் இந்த நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.