தின்பண்டம் தரமாட்டோம் - பட்டியலின மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை
சங்கரன்கோவில் அருகே பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கச் சென்ற தலித் மாணவர்கள் தின்பண்டம் வழங்கக் கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளது என மாணவர்களை திருப்பி அனுப்பிய வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர்கள் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது தின்பண்டங்கள் வாங்குவதற்காக பெட்டிக் கடைக்குச் சென்றனர்.
இதையடுத்து பெட்டிக் கடைக்காரர் 'ஊர் கட்டுப்பாடு
விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடிய போது இரு பிரிவு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறின் போது சாதியை சொல்லி திட்டி 2 பேர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் மீது பி.சி.ஆர் கேஸ் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.