குறைந்து வரும் கொலைகள்” – ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து வார்டன் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
சென்னையில் 104 நாங்கு இடங்களில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் விபத்துகளைக் குறைக்க விபத்து குறித்து போக்குவரத்து போலீசார், சென்னை மாநகராட்சி, சென்னனை ஐஐடி இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது. அதன்பின் அந்தப் பகுதியில் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார். விபத்தை குறைக்க முதல்வர்
உத்தரவுப்படி தனி குழு அமைத்து உள்ளதாகவும் கூறினார்.
சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது என்பது குறித்த கேள்விக்கு, உலகில் குற்றங்கள் அங்கங்கு நடைபெற்று தான் வருகிறது. குற்றத்தைத் தடுக்க
நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சென்னையில் 20% சதவீதம் மரணங்கள் குறைந்துள்ளது. மாவா, குட்கா விற்பனை செய்வதைத் தடுத்து அதனை பறிமுதல் செய்துள்ளோம் என விளக்கம் அளித்தார்.
2004 ஆம் ஆண்டில் இருந்து நிழுவையில் உள்ள 8 கொலை வழக்குகளை விசாரித்து வருகிறோம். கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகிறோம். அதையும் மீறி மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் சிறைக்கு அனுப்புவோம் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.