திருப்பூர் சிராஜுல் இஸ்லாம் ஷாபி பள்ளியின் மதரஸாவில் IFTN தலைமை கூட்டம் நடந்தது.


 பொது சிவில் சட்டம் அதற்கான ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஜமாத்தார்களோடு நேற்று மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு திருப்பூர் சிராஜுல் இஸ்லாம் ஷாபி பள்ளியின் மதரஸாவில் நடந்தது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் நம் IFTN அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் மாவட்டத்திலுள்ள அனைத்து  ஜமாத் பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து நடத்துவது என்று தலைமையால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.           இதனடிப்படையில்...ஒவ்வொரு மாவட்டத்திலும் ‌ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம். தற்போது ஒரு இஸ்லாமிய சமூகம் சார்ந்த பிரச்சினைகளை முன் வைத்து அந்தந்த மாவட்டங்களிலுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் கூடி ஆலோசித்து தலைமையை தொடர்பு கொள்ளுங்கள். 

தாங்கள் முன் நின்று முடிந்த வரை மாவட்டத்தின் அனைத்து ஜமாத்துக்களுக்கும் அழைப்பு விடுத்து ஜமாத் துக்களின் நிர்வாகிகள் கலந்து கொள்வதுபோல ஏற்பாடு செய்து, அதோடு நம் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொள்வது போல ஒரு ஹோட்டல் ஹால் அல்லது மண்டபம் ஏற்பாடு செய்து, உணவு, வெளி ஊரிலிருந்து வருபவர்களுக்கு  , குளியல், சிறப்பு அழைப்பாளர்களுக்கு தங்குவதற்கென்று ரூம் அரேஜ்மெண்ட்ஸ் இவைகளை ஏற்பாடு செய்து டேட் பிக்ஸ் பண்ணிவிட்டு  சொல்லுங்கள்.

 நாம் ஒருங்கிணைப்பாளர்களை அழைப்போம்.அல்லது தலையோடு தொடர்பு கொண்டு எப்படி நடத்துவது என்று ஆலோசித்து கொள்ளவும். அதோடு திருமாவளவன், வேல் முருகன், திருமுருகன் காந்தி போன்ற ஏதாவதொரு தலைவரை அழைப்போம். இஸ்லாமிய கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரிதான். தலைப்பு ; பொது சிவில் சட்டம்.(uniform civil code) இதுதான் இன்றைய முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இதை நம் சமூகத்தின்  

அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்து இதற்கான ஒரு ஃபார்ம் தயாரித்து அதை ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டி உள்ளது.     


இதை ஒவ்வொரு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஜமாத் தையும் அவரவர்கள் சார்ந்த மக்களுக்காக பொறுப்பேற்க வைக்க வேண்டும். தமிழக மாநில அரசு தேவையில்லாமல் எந்த மாநிலமும் செய்யாத காரியத்தை நம் சமுதாயத்திற்கு எதிராக.. 

தமிழக அரசு பாஸிஸ சக்திகளுக்கு ஆதரவாக பொது சிவில் சட்ட ஆய்வு கமிட்டி என்ற பெயரில் அமைத்திருக்கிறது. இதை எதிர்த்தே நாம் களம் காண வேண்டியுள்ளது. தற்போது திருப்பூர் மாவட்டத்து ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்கள். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்