திருவள்ளூரில் கைதான டாஸ்மாக் மேலாளர்-பார் உரிமத்துக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்

 


திருவள்ளூரில் பார் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ஒரு லட்ச ரூபாயை லஞ்சமாக வாங்கிய டாஸ்மாக் மேலாளரை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என் 2 மாவட்டங்களாக பிரித்து டாஸ்மாக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் 137 டாஸ்மாக் கடைகள் உள்ளன.   

இந்நிலையில், திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் அமைப்பதற்காக தாணு என்பவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலைமன்னனிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு, 'பார் நடத்த அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுக்க வேண்டும் இல்லையேல் ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரையும் இழுத்து மூடுவேன்' என கலைமன்னன் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே. காக்களூர், வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் பார் நடத்தி வரும் தாணு, தன்னிடம் ஒரு லட்சம் கேட்டதால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.  இதனையடுத்து காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் களமிறங்கினர். 

தொடர்ந்து, டாஸ்மாக் மேலாளரிடம் ரூபாய் ஒரு லட்சத்தைக் கொடுப்பதற்காக காக்களூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்துக்கு தாணு சென்றுள்ளார். அப்போது, லஞ்சப் பணத்தை டிரைவர் சங்கரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை  டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார், டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன், டிரைவர் சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்