ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை பெற்றது: இபிஎஸ்
October 14, 2019 • M.Divan Mydeen

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பழனிசாமி பேசியதாவது: அதிமுக என்னும் இயக்கம், ஐஎஸ்ஐ முத்திரை பதித்தது. ஆனால், திமுக போலியானது. எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் ஒரு எம்எல்ஏ எண்ணிக்கை தான் கூடும். செய்ய முடியாத காரியங்களை எல்லாம் கூறி திமுக கூட்டணியினர் வாக்கு பெற்றனர். அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது. நாங்கள் செய்ய கூடிய வாக்குறுதிகளை சொல்லி தான் ஓட்டு கேட்கிறோம். அதை செய்தும் காண்பிக்கிறோம். இவ்வாறு பழனிசாமி பேசினார்.