ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா 130 நிர்வாகி களைக் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு புதிய பொறுப்பும்
July 23, 2019 • Mariappan

அ.தி.மு.க தென்சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 43 வட்டச் செயலாளர்கள் உட்பட 130 நிர்வாகிகளின் பதவி பறிக்கப்பட்டு, சுமார் 200 பேருக்கு புதிய பொறுப்பும் பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிக்குப் பின்னால் கோடிக்கணக்கில் பணம் புரள்வதாகவும் உண்மையான கட்சி விசுவாசிகள் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாகவும் மாவட்டச் செயலாளரான சத்யா எம்.எல்.ஏ மீது புகார் கூறப்படுகிறது.யார் இந்த சத்யா? ஆந்திராவைப் பூர்விகமாகக்கொண்ட இவரின் முழுப் பெயர் பெயர் சத்ய நாராயணன். 80-களில் சென்னை தி.நகரில் பால் வியாபாரம் செய்துகொண்டே, சைக்கிள் கடை ஒன்றையும் நடத்தினார். அ.தி.மு.க-வில் இணைந்தவருக்கு, 1991-96 எஸ்.ரகுபதி மற்றும் செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது. மளமளவெனப் பிரபலம் அடைந்தார். ஆதி ராஜாராம் மாவட்டச் செயலாளராக இருந்தவரையில், கட்சிப் பொறுப்பு ஏதும் சத்யாவுக்கு அளிக்கப்படவில்லை. தி.நகர் எம்.எல்.ஏ-வாக வி.பி.கலைராஜன் வந்த பிறகு, சத்யாவுக்குப் பகுதிச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. 2011-ல் கவுன்சிலர் ஆனவர், சென்னை மாநகராட்சியின் நியமனக் குழு உறுப்பினரானார். நூர்ஜகான், சைதை துரைசாமி என மற்றவர்களும் குழுவில் இடம்பெற்றிருந்தாலும் சத்யா எடுப்பதே இறுதி முடிவானது. அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம், துறை ரீதியான நடவடிக்கை போன்ற விவகாரங்களில் நியமனக் குழுதான் தீர்மானிக்கும் என்பதால், சென்னை மாநகராட்சியில் அசைக்க முடியாத நபராக வலம் வந்தார் சத்யா.2016 சட்டமன்றத் தேர்தலின்போது, அன்றைய தலைமைச் செயலகப் புள்ளிகள் மூலம் அ.தி.மு.க தலைமையை நெருங்கியவர், தி.நகர் எம்.எல்.ஏ-வாகவும் வெற்றிபெற்றார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், தி.நகர் ஆகிய நான்கு தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும் அவரிடம் வந்தது.இப்படி அ.தி.மு.க-வில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வரும் சத்யாவை எதிர்த்துதான், பதவி பறிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.நகர் கட்சி நிர்வாகிகள் சிலர், ''போஸ்டர், பேனர்களில் தன் பெயரைத் தவிர மற்ற எவர் பெயரும் வரக்கூடாது என்பதில் சத்யா உறுதியாக இருக்கிறார். தப்பித் தவறி வளர்மதி, மைத்ரேயன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தால், அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டார். இதனாலேயே கட்சி நிர்வாகிகளுக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் செங்கோட்டை யனும் சத்யாவுக்கு மிக நெருக்கம் என்பதால், கட்சியினர் எதுவும் செய்ய முடியாமல் இருந்தோம்.இந்த நிலையில்தான், எந்தக் காரணமுமே இல்லாமல் 130 நிர்வாகி களைக் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, தன் ஆதரவாளர்களுக்குப் புதிய பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். அ.ம.மு.க-வில் பகுதிச் செயலாளராக இருந்த அசோக் என்பவர், அ.தி.மு.க-வுக்கு வந்து இரண்டே நாளில் அவருக்கு அம்மா பேரவையின் மாவட்ட துணைச்செயலாளர் பொறுப்பு அளிக்கப் பட்டுள்ளது. 118-வது வார்டைச் சேர்ந்த மோகன் என்பவர் தி.மு.க-வுக்குத் தாவி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. பகுதி இணைச் செயலாளர் பொறுப்பை அவருக்கு அளித்துள்ளார் சத்யா.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கட்சிப் பொறுப்புகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. சரவணன், கற்பகம் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டுமே, எட்டு பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டபோது, ஓ.பி.எஸ் படத்தைச் செருப்பால் அடித்து விமர்சனத்துக்கு உள்ளான சேப்பாக்கம் ஜெயச்சந்திரன், பகுதிச் செயலாளராகியுள்ளார். சத்யாவின் ஆதரவாளரான அண்ணா நகர் பகுதிச் செயலாளர் தசரதனைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதிச் செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். ஒரு வட்டச் செயலாளர் பொறுப்புக்கு ஐந்து லட்சமும், பகுதிச் செயலாளர் பொறுப்புக்கு பத்து லட்சமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்து பதவி வாங்கும் நிலை அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ளது. அம்மா இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?'' என்றனர். வட்டச் செயலாளர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திய 117-வது வட்ட முன்னாள் செயலாளர் சின்னையன், ''எங்களை நீக்கியது தொடர்பாக சத்யாவிடம் கேட்டபோது, 'முதலமைச்சரே என் வீட்டுல சாப்பிட்டுப் போவாரு. யார்கிட்ட வேணும்னாலும் போய் புகார் கொடுங்க. என்னை அசைக்க முடியாது' என்றார். இதன் பின்னர்தான் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஐவர் குழுவின் கே.பி.முனுசாமி, தங்கமணி, வைத்திலிங்கம் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம். இதே நிலை நீடித்தால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் அ.தி.மு.க தோல்வியை நோக்கித்தான் செல்லும்'' என்றார். புகார்கள் குறித்து விளக்கமறிய சத்யாவைப் பலமுறை தொடர்பு கொண்டோம். ஒரு வாரத்துக்கும் மேலாக நமது அழைப்பை அவர் ஏற்காத நிலையில், நமது குறுஞ்செய்திக்கும் பதிலளிக்க வில்லை. தொடர்ந்து அவரது அதிகாரபூர்வ அரசு மின்னஞ்சல் முகவரியான mlathiyagarayanagar@tn.gov.in-க்கும் விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினோம். அதற்கும் பதில் வரவில்லை. அவரிடமிருந்து விளக்கம் வரும்