ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்தினால் குண்டர் சட்டம் - ஆட்சியர்
September 6, 2019 • M.Divan Mydeen

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்த முயன்றால் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.வி குப்பம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் முதலமைச்சரின் குடிமராமரத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிமராமத்து பணிகளில் ஈடுபடும்போது ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்த முயன்றால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.