ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ஆடி கார் நிறுவனத்திற்கு ஜெர்மனி போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை
September 16, 2019 • M.Divan Mydeen

AUDI கார்களை தயாரிக்கும் நிறுவனமான ஃபோக்ஸ்வாகனுக்கு ஜெர்மனியின் மோட்டார் வாகன ஆணையம் அபராதம் விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளது. டீசல் கார்களில் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கச் செய்யும் சட்டவிரோதமான மென்பொருளை நீக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனியின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செப்டம்பர் 26ம் தேதி எழுதிய மூன்று கடிதங்களில் ஜெர்மனியின் மோட்டார் வாகன ஆணையமான கேபிஏ வி 6, வி 8 நி8 TDI எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆடி டீசல் வாகனங்களில் இருந்து குறிப்பிட்ட மென்பொருளை நீக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மீறினால், ஒவ்வொரு காருக்கும் 25 ஆயிரம் யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், ஒரு லட்சத்து 27 ஆயிரம் கார்களில் சட்டவிரோதமான மாசு கட்டுப்பாட்டுக்கான மென்பொருள் பொருத்தப்பட்டதை போக்குவரத்து அமைச்சகம் கண்டறிந்ததாகவும் இதில் 77 ஆயிரத்து 600 கார்கள் ஜெர்மனியில் மட்டுமே ஓடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு ஆடி கார் நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை. தங்களுக்கு கேபிஏ வால் விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கேள்விக்குட்படுத்தப்பட்ட 8 சதவீத கார்களை தரமேம்பாடு செய்துவிடுவோம் என்று ஆடி நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.