ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ஆட்டோக்களை குறிவைத்து திருடி வாடகைக்கு விட்ட இருவர் கைது
September 17, 2019 • M.Divan Mydeen

ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருடி, வெவ்வேறு இடங்களில் வாடகைக்கு விட்டு வந்த இரண்டு பேரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு சென்னை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை சிந்தாதிரிபேட்டையில் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்கள் இரவில் திருடுபோவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணா சிங் தலைமையில் தனிப்படை அமைத்து ஆட்டோ திருடர்களை தேடி வந்தனர். குறிப்பாக போலீசார் கையில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை வைத்து திருடர்ளை தேடும்போது, இரண்டு சி.சி.டிவி காட்சிகளில் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்து கொண்டு வந்து ஆட்டோவைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிந்துள்ள திருடர்களின் முகத்தை எடுத்து ஃபேஸ் டிடக்டர் செயலியை பயன்படுத்தி போலீசார் தேடினர். அதில் ஒருவர் ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு 10 ஆட்டோக்களை திருடி ,குண்டர் சட்டத்தில் சிறை சென்று வெளியே வந்த ஜெயக்குமார் என்பது தெரிய வந்தது. செல்போன் சிக்னலை வைத்து வேலூரில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆட்டோ திருட உதவிய ,ஜெயக்குமாரின் கூட்டாளி சசிக்குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிந்தாதிரிபேட்டையில் இரண்டு ஆட்டோவும், சைதாப்பேட்டையில் 2 ஆட்டோவும்,தாம்பரத்தில் 4 ஆட்டோவும் திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 3 ஆட்டோக்களை போலீசார் மீட்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திருடிய ஆட்டோக்கள் அனைத்தையும் வாடகைக்கு விட்டு சம்பாதித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஒரு இடத்தில் திருடிய ஆட்டோவை வேறு இடத்தில் வாடகைக்கு விட்டு ஓட்டினால் கண்டுபிடிக்க முடியாது என்ற கணக்கிட்டு அதனடிப்படையில் சம்பாதித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து மற்ற ஆட்டோக்களையும் மீட்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.