ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் மீண்டும் அமல்
September 1, 2019 • M.Divan Mydeen

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளதுஇது, இன்று முதல் இதுகுறித்து ரயில்வே கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ஐஆர்சிடிசியில் ஆன்லைன் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதற்கான சேவைக் சட்டததை மண்டும் அமல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகமும், 'சேவைக் கட்டணம் தற்காலிக விலக்கு மட்டுமே. எனவே, ரயில்வே அமைச்சகம் அதனை மீண்டும் அமல்படுத்தலாம்' என்று கருத்து தெரிவித்தது. இதையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி (இன்று) முதல், ஏசி இல்லாத வகுப்புக்கு ரூ15ம், முதல் வகுப்பு ஏசி உள்பட அனைத்துஏசிவகுப்புகளுக்கும் ரூ30ம் சேவைக் கட்டணமாக மீண்டும் வசூலிக்கப்படும். இத்துடன் சரக்கு, சேவை வரியும் (ஜிஎஸ்டி) தனியாக வசூலிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.