ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
இந்தியா நடத்திய கருத்தரங்கை புறக்கணித்த பாகிஸ்தான் இரவு விருந்தில் பங்கேற்றது
September 13, 2019 • M.Divan Mydeen

டெல்லியில் நடைபெற்ற பன்னாட்டு ராணுவ கருத்தரங்கத்தை புறக்கணித்த பாகிஸ்தான் குழுவினர் இரவு விருந்தில் மட்டும் பங்கேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் இடம் பெற்றுள்ள 28 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ராணுவ மருத்துவக் கருத்தரங்கத்தை இந்திய அரசு முதல் முறையாக டெல்லியில் நடத்தியது. நேற்று தொடங்கிய இந்த இரு நாட்கள் கருத்தரங்கத்தில் ராணுவ மருத்துவத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, தரத்தை உயர்த்துவது, சவாலான சூழல்களை எதிர்கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இந்திய தரப்பில் 40 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கருத்தரங்கத்தை பாகிஸ்தான் புறக்கணித்தது. இந்த விழாவில் பங்கேற்க அனுமதி பெற்றிருந்த அந்நாட்டு தூதரக மற்றும் அதிகாரிகள் கருத்தரங்கங்களை புறக்கணித்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றனர். இந்திய ராணுவத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் உண்டு மகிழ்ந்த அவர்கள்,கருத்தரங்கத்தை மட்டும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.