ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
உதகை உள்ளிட்ட 68 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்.கள் தொடக்கம்
September 1, 2019 • M.Divan Mydeen

நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்.கள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் 1 மற்றும் 2 லிட்டர் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் 33 லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் 1 மற்றும் 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவை பூமியில் புதையுண்டு இயற்கை வளங்கள் மற்றும் நீர்வளத்தை அழிப்பதாக புகார் எழுந்துள்ளது.பிளாஸ்டிக் பாட்டில்களை தடை செய்யவும், சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வசதிகளை செய்து தரவும் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 180 இடங்களில் சுகாதாரமான குடிநீரை வழங்கும் வகையில் வாட்டர் ஏ.டி.எம்.கள் நிறுவப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக உதகை, குன்னூர், கூடலூர் சுற்றுவட்டாரங்களில் 68 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. உதகை தாவரவியல் பூங்காவில் வாட்டர் ஏ.டி.எம்.மை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். வாட்டர் ஏ.டி.எம்.களில் ஐந்து ரூபாய்க்கு 1 லிட்டர் தண்ணீரும், 10 ரூபாய்க்கு 2 லிட்டர் தண்ணீரும் வழங்கப்படும். செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடைகள், ஹோட்டல்களில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.