ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம் மற்றும் விரல் ரேகை பிரிவு) பயிற்சி நிறைவு விழா
August 30, 2019 • M.Divan Mydeen

தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் 75 மகளிர் உட்பட 228 பேர் மற்றும் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் 10 மகளிர் உட்பட 179 பேர் தங்களது அடிப்படை பயிற்சியினை முடித்து இன்று 30.08.2019 -ம் தேதி நடைபெற்ற வண்ணமிகு பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் திரு. ஐ.கு. திரிபாதி, இ.கா.ப, காவல் துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு அவர்கள் கலந்துகொண்டு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். தற்போது பயிற்சி முடித்து செல்லும் தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்களில் 72 பேர் முதுகலை பொறியாளர் பட்டங்களையும், 115 பேர் இளங்கலை பொறியாளர் பட்டங்களையும், 41 பேர் பட்டைய படிப்பையும் பெற்றவர்கள். இவர்களில் 52 பேர் காவல்துறையிலிருந்தும், 3 நபர்கள் அரசுத்துறைகளிலிருந்தும், 90 பேர் தனியார் துறைகளிலிருந்தும் மற்றும் 75 பேர் புதியதாகவும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தொழில் நுட்ப உதவி ஆய்வாளர் பயிற்சியானது 25 வாரங்கள் அடங்கிய உள்ளரங்கு பயிற்சியில், உதவி ஆய்வாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப பாடங்கள், பணி ஒழுக்க மற்றும் நடத்தைகள், ஒருமைப்பாடு மற்றும் பணி நேர்மை கற்பிக்கப்பட்டது. பயிற்சிக்கான பாடதிட்டத்தில் தகவல்தொடர்பு, தற்கால் தொழில் நுட்ப முன்னேற்றம், மென்பொருளின் தற்கால வளர்ச்சி முறைகள், கணிணி வழி சைபர் குற்றங்களில் சவால்களை சந்திக்கும் திறன்களை வளர்க்கும் மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன், குற்றம் சார்ந்த சட்டங்கள், மத்திய மற்றும் மாநில சட்டங்கள், பணி மேன்மையை கையாள்வது, மனித உரிமையை பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டப்பயிற்சிகள் இவர்களது பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் இன்றைய மாறி வரும் விஞ்ஞான சூழ்நிலையில் அறிவியல் சாதனங்களை கையாள்வது, மதவாதம், தீவரவாதம், நுண்ணறிவு, அன்னிய ஊடுருவல், சமுதாய காவல்பணி ஆகியவைகளில் தொழில்நுட்பம் மூலம் திறம்பட காவலர்கள் செயலாற்ற தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் தலைமை பண்புகளை பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் உடல் வலிமைக்காக கவாத்து மற்றும் துப்பாக்கி சுடுதல், நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கிடையே மன நிலையை ஒழுங்குபடுத்தும் யோகா பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது. தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்களாகிய இவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைகழகம், ஐஐடி போன்ற மேன்மையான கல்வி நிலையங்களின் வல்லுநர்களுடன் தொழில்நுட்பம் சார்ந்த கலந்துரையாடல்கள் மூலம் தங்களது திறன்களை மேம்படுத்தியுள்ளனர். மேலும் தமிழ்நாடு காவல் கணிணி மற்றும் தொடர்பு மையத்தில் தொழில்நுட்ப கருவிகளை கையாளும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயிற்சியை முடித்து செல்லும் தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்களில் மேலும் இந்த பயிற்சியை முடித்து செல்லும் 82 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஆணையரங்களிலும் மாவட்டங்களிலும், கூடிய விரைவில் இருக்கும் சைபர் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படவுள்ளது ஒரு முக்கிய நிகழ்வாகும். இவ்விழாவின் போது உள்ளரங்கு, வெளியரங்கு மற்றும் துப்பாக்கி பயிற்சிகளில் சிறந்து விளங்கிய பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கங்களையும்ஒட்டுமொத்த பயிற்சியில் சிறந்து விளங்கிய பயிற்சி உதவி ஆய்வாளருக்கு அவர்களின் கெளரவ வாளையும், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் வழங்கினார்கள். (பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள்: தமிழ் நாடு காவல்துறையில் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் தமிழ்நாடு காவலர் தேர்வாணையம் மூலம் செய்யப்பட்டு தமிழ்நாடு காவல் துறையில் இணைக்கப்படுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்இவ்விழாவின் போது உள்ளரங்கு, வெளியரங்கு மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கங்களையும், ஒட்டுமொத்த பயிற்சியில் சிறந்து விளங்கிய பயிற்சி உதவி ஆய்வாளருக்கு DGP அவர்களின் கெளரவ வாளையும், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் அவர்கள் வழங்கினார்கள். (பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள்: தமிழ் நாடு காவல்துறையில் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள 179 விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் தமிழ்நாடு காவலர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு காவல் துறையில் இணைக்கப்படுவது ஒரு முக்கிய நிகழ்வாகும், இவர்களில் 51 நபர்கள் முதுநிலை பட்டங்களையும் மற்றும் 128 நபர்கள் இளங்கலை பட்டங்களை பெற்றவர்களாவார்கள். இவர்களுக்கு மூன்று மாத கால அடிப்படை பயிற்சியும், மூன்று மாத கால் மாவட்டங்களில் செய்முறை பயிற்சியும் திறம்பட முடித்து இன்று பயிற்சி நிறைவு அணிவகுப்கு விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட 12 வார கால பயிறச்சிகளில் கைவிரல் ரேகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, கைவிரல் ரேகையை கொண்டு கணிணியின் உதவியுடன் குற்றவாளிகளின் இலக்குகளை தேடுவது, அவர்களை விரைந்து கண்டுபிடிப்பது, குற்ற சம்பவ இடத்தில் கைரேகை சாட்சியங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக கண்டுபிடித்து அவைகளை கைப்பற்றி முறையான சட்ட பரிமாணங்களும் நீதிமன்றத்திற்கு அனுப்பி வழக்குகளை வேகமாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கி கொடுக்கும் வழிமுறைத்திட்டங்கள் இவர்களின் பாட திட்டங்களின் தலையான அம்சங்களாகும். மேலும் இவர்களின் பயிற்சியின் போது உடற்திறனை வளர்க்கும் உடற்பயிற்சிகள், நீச்சல் பயிற்சிகள், மனத்தின்மையை மேன்படுத்தும் யோகா பயிற்சியுடன் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மின்னணு மென்பொருளில் இவர்கள் செய்முறை பயிற்சியை தமிழ்நாடு காவல் கணிணி மற்றும் தொடர்பு மையத்தில் மேற்கொண்டது மேலும் ஒரு சிறப்பம்சமாகும். கைவிரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட மூன்று நபர்களுக்கு மரியாதைக்குரிய தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் அவர்கள் பதக்கங்களை வழங்கினார்கள். (பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது). திருமதி. S. சாந்தி, இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர், TNPA, அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள், திரு. அமரேஷ் புஜாரி, இ.கா.ப, காவல் கூடுதல் இயக்குனர், TNPA, அவர்கள் உதவி ஆய்வாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி பற்றி விளக்கினார்கள். திரு.கரன் சின்ஹா , இ.கா.ப, காவல் துறை தலைமை இயக்குனர், பயிற்சி அவர்கள் சிறப்புரையும், திரு.ஐ.கு.திரிபாதி, இ.கா.ப, காவல் துறை தலைமை இயக்குனர், தமிழ்நாடு, அவர்கள், பயிற்சி முடித்த உதவி ஆய்வாளர்களுக்கு உறுதிமொழி ஏற்று வாழ்த்துறை வழங்கினார்கள். திரு. K.P.S.ஜெயசந்திரன், காவல் கண்காணிப்பாளர், TNPA அவர்கள் விழாவில் நன்றியுரை வழங்கினார்கள்.