ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
உதவி கமிஷனர்கள் தான் வழக்குப்பதிவு செய்து விசாரணை அதிகாரிகளாக செயல்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்
August 6, 2019 • M.Divan Mydeen

சென்னை போலீசில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுகிறது. ரூ.50 லட்சத்திற்கு மேற்பட்ட மோசடி வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தான் விசாரிக்கிறார்கள். அரசியல் ரீதியான முக்கிய குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தான் விசாரணை செய்கின்றனர். சைபர் கிரைம், நில அபகரிப்பு, வங்கிகளில் மோசடி போன்ற 15 பிரிவுகள் மத்திய குற்றப்பிரிவு போலீசில் அடக்கமாக உள்ளது. கூடுதல் கமிஷனர் தலைமையில் 2 துணை கமிஷனர்கள் மற்றும் 15 உதவி கமிஷனர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார்கள். சி.பி.ஐ. போலீசுக்கு இணையாக மத்திய குற்றப்பிரிவு போலீசை மாற்றுவதற்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.சி.பி.ஐ.யில் முக்கியமான போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரிகள் விசாரணை அதிகாரியாக வழக்குகளை பதிவு செய்யும் பணியை செய்கிறார்கள். மத்திய குற்றப்பிரிவில் தற்போது சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு ஒன்றில் மத்திய குற்றப்பிரிவு போன்ற விசேஷ போலீஸ் பிரிவுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தான் வழக்குகளை பதிவு செய்து விசாரணை அதிகாரியாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் உதவி கமிஷனர்கள் தான் வழக்குப்பதிவு செய்து விசாரணை அதிகாரிகளாக செயல்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், இதர போலீசார் உதவி கமிஷனர்களுக்கு உதவியாக செயல்படுவார்கள்