ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
உத்திர பிரதேசம் எனும் பலாத்கார ராஜ்ஜியம்....
October 1, 2020 • M.Divan Mydeen • தேசிய செய்திகள்,

உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸ் கிராமத்தில் செப்டம்பர் 14 அன்று 19 வயது நிரம்பிய மனிஷா தன் அம்மா மற்றும் சகோதரருடன் வயல் வெளியில் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டு புல் சேர்ந்ததும் அவரது சகோதரர் முதல் கட்டை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்து செல்கிறார்.

அங்கே அம்மாவும் மகளும் மீண்டும் புல் அறுக்க தொடங்குகிறார்கள். புல் அறுத்துக் கொண்டேயிருந்த அம்மா தலை நிமிர்து பார்க்கும் போது தன் மகளை காணவில்லை என்பதை உணருகிறார். மகளை தேடி அருகாமை வயல்களில் கூப்பாடு போட்டுக் கொண்டே தேடுகிறார்.

நான்கு பேர் இந்த பெண்ணை அவளது துப்பட்டாவை வைத்து கட்டி அருகில் இருக்கும் சோளக்காட்டிற்குள் கடத்திச் செல்கிறார்கள். அங்கே வைத்து நால்வரும் பலாத்காரம் செய்கிறார்கள். துப்பட்டாவை வைத்து அழுதியதில் அவள் கழுத்து எலும்புகள் நெறுங்குகிறது, கழுத்தி பலமான காயங்கள் ஏற்படுகிறது. அதையும் மீறி அவள் கூச்சல் போட்ட போது அதில் ஒருவன் அவள் நாக்கை அறுத்தெரிகிறான்.

அவள் கடுமையாக தாக்கப்பட்டதால் இடுப்பு முதுகு என எழும்புகள் உடைந்துபோகிறது, அவளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. காவல்துறையின் மெத்தன போக்கால் நான்கு ஐந்து நாட்கள் அவளுக்கு ஊரிய சிகிச்சையளிக்க மறுக்கிறார்கள். அந்த பெண்ணை அலிகரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் உயர் சிகிச்சையளிக்க வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டதால் உடன் புதுதில்லி சப்தர்ஜங்க் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

புதுதில்லி மருத்துவமனையில் அவள் சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார். வேக வேகமாக அவளை பிணக்கூராய்வு செய்கிறார்கள், அவளது உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் அவளது குடும்பத்தார், உறவினர்கள் என ஒருவரையும் அந்த பெண்ணிண் முகத்தை பார்க்கவோ, சடங்குகள் செய்யவோ அனுமதிக்கவில்லை. மாறாக காவல்துறையினர் அவளது பெற்றோரை அவர்கள் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு காவல்துறையினரே நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு பிணத்தை அயோக்கியத்தனமாக எரியூட்டியிருக்கிறார்கள்.

உத்திர பிரதேசத்தில் நடக்கு யோகியின் ராம ராஜ்ஜியத்தில் நான்கு உயர் சாதியை சேர்ந்த ஆண்கள் ஒரு 19 வயது தலித் பெண்ணை பலாத்காரம் செய்கிறார்கள். யோகி அரசின் மருத்துவர்கள் அவளது நாக்கு அறுபடவில்லை, அவளை யாரும் பலாத்காரம் செய்யவில்லை என்று அறிவிக்கிறது, ஆனால் வேக வேகமாக அவளது உடலை காவல்துறையே எரியூட்டுகிறது. ஏன் இந்த வேகம், ஏன் இந்த திருட்டுத்தனம்?? எரியூட்டப்பட்டது மணிஷா மட்டும் அல்ல இந்தியாவின் பெண் பாதுகாப்பு தொடர்புடைய எல்லாம் சட்டங்களும் தான்.

யோகி தலைமையில் நடக்கும் இந்த ராஜ ராஜ்யத்தை தான் தமிழகத்தில் இறக்குமதி செய்ய தமிழக பாஜக துடித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கு ரவுடிகள், சாதிவெறியவர்கள், வன்முறையாளர்கள் அனைவரையும் இணைத்து பல பெற்று இதே நிலையை தமிழகத்தில் உருவாக்கவே முயலுகிறார்கள். காஷ்மீரில் கோவில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆதரவாக தேசிய கொடியுடன் போராடியவர்கள் பாஜக காரர்கள் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது என் கடமை. உத்தரபிரதேசத்தில் நடக்கும் எண்கவுண்டர்கள் முதல் பலாத்காரங்கள் வரை எதிற்கும் அங்கு நீதியில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய சம்பவங்களில் இருந்து தமிழகம் பாடம் கற்கவில்லை எனில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.... ”நிர்பயா” ”நிர்பயா” என்று 2012ல் முழங்கியவர்கள் பாஜகவின் கைக்கூலிகளாக காங்கிரசுக்கு எதிரான நாடகத்தில் நடித்தார்கள், அதே கூட்டம் அதற்கு அடுத்து எத்தனை பலாத்காரங்களுக்கு எதிராக வீதிக்கு வந்தது, எத்தனை முகநூல் பதிவுகள் போட்டது, எத்தனை HASTAGS TRENDING செய்தது என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இப்படி SELECTIVE AMNESIA வுடன் அரசியல்/சமூக வேலை செய்கிறோம் என்பவர்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்பதையும் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.....