ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
உயர்நீதிமன்றம் எதிரே தீக்குளிக்க முயன்ற பெண்
August 26, 2019 • M.Divan Mydeen

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த துர்கா தேவி என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன் தனது கணவர் தமிழரசுவைப் பிரிந்து 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் குழந்தையை கணவன் அழைத்துச் சென்று விட்டதாகக் கூறியுள்ள துர்கா தேவி, மீட்டுக் கொடுக்கும் படி பல முறை காவல்துறையில் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தின் நுழைவு வாயிலுக்கு வந்த துர்கா தேவி, தாம் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக அப்பெண்ணை தடுத்து நிறுத்தினர். அவரை சமாதானம் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து அனுப்பி வைத்தனர்.