ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
கன்னியாகுமரிவிரைவு ரயிலில் ஏசி வேலை செய்யாததால்பயணிகள் அவதி
September 14, 2019 • M.Divan Mydeen

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.நேற்று மாலை நாகர்கோயிலில் இருந்து புறப்பட்ட அந்த ரயிலில் குளிர்சாதன வசதி செயல்படாதது குறித்து புகார் செய்தும், அதனை சரிசெய்யவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.ரயில் மதுரை வந்தடைந்ததும் பயணிகள் கீழே இறங்கி ரயில் நிலைய மேலாளரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து ரயில்வே மின் ஊழியர்கள் விரைந்து வந்து ரயிலின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட மின் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கோளாறை முழுமையாக சரி செய்ய இயலவில்லை . மேலும் ஏசி பெட்டியின் ஒரு பகுதியில் மட்டும் சரி செய்யப்பட்ட நிலையில் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.