ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதால், கோப்புகள் நனைந்து வீணாகும் அவலம் உள்ளது.
July 26, 2019 • M.Divan Mydeen

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, தரைதளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளின் தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் துறை சார்ந்த கோப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது.இதன் மூலம் மழை பெய்தால், உடைப்பு வழியாக மழைநீர், புகும் நிலை நீடித்து வருகிறது. இதனால், மழைநீரில் நனைந்து கோப்புகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தடுக்க சில அலுவலகங்களில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு பகுதிகளில், அட்டைகளை வைத்து அலுவலர்கள் உடைப்புகளை மறைத்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் தற்போது, சுற்றுச்சுவர் மற்றும் ஆர்ச் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆனால், கோப்புகள் உள்ள அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது அலுவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அரசு கோப்புகளை பாதுகாக்க சேதமடைந்த ஜன்னல் கண்ணாடிகளை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.