ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்
September 30, 2019 • M.Divan Mydeen

சிவகங்கை: சுடுகாட்டில் நிர்வாண பூஜை செய்துவிட்டு, 2 மணி நேரத்தில் காதலியின் கணவரை கொலையும் செய்துள்ளார் ஒரு சாமியார்! காரைக்குடி தந்தை பெரியார் நகரில் ஒரு மொட்டை மாடியில் பிணம் விழுந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவும் விரைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் சென்று விசாரணையும் நடந்தது. கொடூரமாக கொலை செய்யப்பட்டவர் பெயர் மணிமுத்து. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, சில தினங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பி இருந்தார். இவரது மனைவி பூமதி. இந்த தம்பதிக்கு பிரவீனா என்ற 20 வயது மகள், கமலக்கண்ணன் 19, சஞ்சய் அரவிந்த் 17 என்ற2 மகன்கள் இருக்கிறார்கள். வீட்டு மொட்டை மாடியில் ஒரு பிணம் விழுந்துகிடக்க.. இவர்கள் எல்லோருமே வீட்டுக்குள் இருந்திருக்கிறார்கள். யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் படு மும்முரமாக இந்த விஷயத்தில் இறங்கினார்கள். முதல் ஏனென்றால், கணவர் இறந்த ஷாக், கண்ணீர் எதையுமே அவர் முகத்தில் இல்லை. குடும்ப உறுப்பினர் ஒருவரது பெயரை சொல்லி, அவங்கதான் என் வீட்டுக்காரரை கொன்னுட்டாங்க என்று ஒப்புக்கு கொண்டே இருக்கவும், நம் போலீசாரின் சந்தேக கண் பூமதி மீது அதிகமாக விழுந்தது. இது சரிப்பட்டு வராது என்று, பூமதியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று 'உரிய' முறையில் விசாரித்தனர். பிறகுதான், ராமேஸ்வரம் சாமியார் வேல்முருகன் என்பவர்தான் இதற்கெல்லாம் காரணம் என தெரியவந்தது. சாமியார் வேல்முருகன் பில்லி, சூனியம் எடுப்பதாக சொல்லிக் கொண்டு ஏமாற்று வேலை செய்பவராம். 15 வருஷமாகவே இப்படித்தானாம். கானாடுகாத்தான் அருகிலுள்ள கூட்டுக்கொல்லை எனும் கிராமத்திற்கு புதையல் எடுத்து தர வரும்போதுதான், மணிமுத்துவின் மனைவி பூமதிக்கும், சாமியாருக்கும் பழக்கம் தொத்தி கொண்டுள மணிமுத்து வெளிநாடு போகவும், இன்னும் இவர்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிட்டது. வருஷத்துக்கு ஒருமுறை மணிமுத்து ஊருக்கு வந்தாலும், இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியாமலேயே இருந்திருக்கிறது. இதில் 5 வருஷமாக தொடர்ந்து மணிமுத்து ஊருக்கு வராத சூழல் ஏற்பட்டுவிட்டது. போன வாரம்தான் மணிமுத்து ஊருக்கு வரவும், விஷயத்தை பலர் வந்து சொல்லிவிட்டார்கள். இதனால் மனைவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஜாலியாக சுற்றி கொண்டிருந்த காதல் ஜோடிக்கு, கணவனின் கண்டிப்பு உத்தரவு பிடிக்கவில்லை. அதனால், கணவனின் கை, காலை உடைக்க சாமியாரிடம் சொன்னதே பூமதிதானாம். அதுக்காகத்தான் நாள் குறித்துள்ளார் சாமியார். அமாவாசை, நடுராத்திரி 1 மணிக்கு ராமநாதபுரம் அல்லிக்கண்மாயில் நிர்வாண பூஜை நடத்தி உள்ளார். பின்னர், கூட்டாளிகள் ராமநாதபுரம் பிரகாஷ், குமார் ஆகியோரை கூட்டிவந்து, விடிகாலை 3 மணியளவில் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை எல்லாருமே சேர்ந்து குத்திக் கொன்றிருக்கின்றனர். இதையடுத்து கூண்டோடு அனைவரும் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணையின் பிடியில் உள்ளனர். இதில் முக்கியமான விஷயம், சாமியார் நிர்வாண பூஜை செய்து 2 மணி நேரத்தில் இந்த கொலையை செய்தார் என்றால், ஆறே மணி நேரத்தில் சாமியார் & கோ-வை தூக்கிவிட்டனர் நம் போலீசார்!