ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு விசித்திரமானதண்டனை.!
September 18, 2019 • M.Divan Mydeen

காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக புதுமணத் தம்பதியை அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன் காதலியை தோளில் சுமந்தபடி ஊரை வலம் வரும்படி இளைஞர் ஒருவருக்கு விசித்திரமான தண்டனயை ஊர் பஞ்சாயத்து வழங்கியது.குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் உள்ள மோலி என்ற சிறிய கிராமத்தில் காதல் ஜோடியையும் அவர்கள் குடும்பத்தினரையும் ஊர் தலைவர்கள் தண்டனை கொடுத்து துன்புறுத்தினர். இதன் ஒரு பகுதியாக காதலியை தோள் மீது சுமந்தபடி அந்த இளைஞர் ஊரை வலம் வந்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின் படி உயர்த்தப்பட்டுள்ள அபராதத் தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்கள் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுவதாக தெரிவித்து, அமைச்சரின் விளக்கத்தை கேட்டனர். அதற்கு பதிலளித்த கட்கரி அபராதம் அதிகமாக இருந்த போதும் இச்சட்டத்தை கட்சி வேறுபாடின்றி பல்வேறு தரப்பினர் வரவேற்றிருப்பதாக கூறினார்.அபராதத்தை வசூலிக்கும் மாநில அரசுகளின் போக்குவரத்துக் காவல்துறையினர் அந்த வருவாயை மாநில அரசு கருவூலத்தில்தான் செலுத்துகின்றனர்.அது மத்திய அரசின் வருமானம் அல்ல என்று கூறிய அவர் மாநில அரசுகள் அபராதம் அதிகமாக இருப்பதாக கருதினால் குறைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்