ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
காவல்துறையினர் கைது செய்யும் ரவுடிகள் எல்லாம் பாத்ரூமில் வழுக்கி விழுகிறார்களே என்று கேட்டதற்கு, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் பதில் சொல்லாமல் நழுவினார்.
August 3, 2019 • M.Divan Mydeen

1985ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக பணியில் அமர்த்தப்பட்டு, டிஜிபி ரேங்கில் கும்பகோணம், அரசு போக்குவரத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஜாங்கிட் நேற்று பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இன்று சென்னை மணப்பாக்கத்தில் முன்னாள் டிஜிபியாக செய்தியாளர்களை சந்தித்தார் ஜாங்கிட். அப்போது அவர் பேசுகையில், தனது பணிக்காலத்தின் போது சென்னையில் ரவுடிகளை ஒடுக்கியது, பவாரியா கொள்ளையர்களை ஒழித்துக் கட்டியது போன்றவை மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், என்னுடன் பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்துத் துறையினருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஜாங்கிட் தெரிவித்தார். தீரன் படம் பார்த்தபோது மனம் திக்கென்றதா? உண்மையான தீரன்  ஓய்வு பெற்றார்! அவரிடம், தற்போது கைது செய்யப்படும் ரவுடிகள் எல்லாம் பாத்ரூமில் வழுக்கி விழுகிறார்களே அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். அதே சமயம, சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகாதது தனக்கு வருத்தமில்லை என்றும் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.