ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
கே.கே.நகரில் ஐ.டி. நிறுவன ஊழியரைமிரட்டி பணம் பறித்த கும்பல்..!
September 1, 2019 • M.Divan Mydeen

சென்னை கே.கே.நகரில் ஐ.டி. நிறுவன ஊழியரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த புகாரில், அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கே.கே.நகரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற ஐடி நிறுவன ஊழியர் அளித்துள்ள புகாரில், வெள்ளிக்கிழமை அன்று வடபழனி செல்ல இருசக்கர வாகன செயலியில் பதிவு செய்து விட்டு காத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த சிலர், ஸ்ரீகுமாரிடம் பேச்சு கொடுத்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரில் இருந்த 3 பேர் திடீரென்று தன்னைத் தாக்கியதுடன் கத்தியைக் காட்டி மிரட்டி 11 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்ததாகவும், கால் சட்டையை கழற்றி புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு 50,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கே.கே.நகர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற அரசியல் கட்சி பிரமுகரையும், சரவணன், மணிகண்டன் ஆகிய இளைஞர்களையும் கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.