ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர், வழக்கறிஞர் பணிகளில் ஈடுபட தடை
September 4, 2019 • M.Divan Mydeen

கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் வழக்கறிஞர் பணிகளில் ஈடுபட தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் வி.ப்ரீத்தா, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பி.அருள் மற்றும் போலியாக சமரச மையங்கள் நடத்தி மக்களை ஏமாற்றிய வழக்கில் சிக்கிய வழக்கறிஞர்கள் கே.ராஜாராம், பி.வி ரவி,பி.கே முத்துசாமி உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதுமுள்ள அனைத்து வகையான நீதிமன்றங்கள் மற்றும் தீர்பாயங்களில் இந்த 5 பேரும் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் அனைத்து வகையான நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.