ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையின் போது கணக்கில் வராத சுமார் ரூ.3.32 லட்சம் பறிமுதல்
September 18, 2019 • M.Divan Mydeen

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர் ஊழல் நடப்பதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவுத்துறை ஆய்வு குழுவுடன் இணைந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பத்திரப்பதிவு செய்த பொதுமக்களிடம் இருந்து முறைகேடாக சுமார் 3 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வாங்கியதும், அதற்கு முறையாக கணக்கு காட்டப்படாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணையில் பல்வேறு வழிகளில் சார்பதிவாளர் மற்றும் அலுவலர்கள் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து கோப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு இரவு வரை நடைபெறும் என்பதால், முழு விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவியபோதும், அலுவல் நேரம் வரை வழக்கமான பத்திர பதிவு பணி நடைபெற்றது.