ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சாலையில் தனி ஆளாக நின்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பாட்டி
September 12, 2019 • M.Divan Mydeen

சென்னை தரமணியில் வயதான பெண்மணி ஒருவர், சாலையின் நடுவே, தனி ஆளாக நின்று போக்குவரத்து போலீஸ் போல வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியை சேவையாக மேற்கொண்டு வருகிறார். மகாத்மா காந்தி 100 அடி சாலையை கடக்க முடியாமல் மாணவர்களும் பெண்களும், சிரமப்பட்ட நிலையில் தரமணியில் வசிக்கும் நடுத்தர வயதைக் கடந்த சகூர் பானு என்பவர், தனி ஒரு ஆளாக நின்று போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி வருகிறார். பாயம்மா என்று அன்போடு அழைக்கப்படும் இவர் மருத்துவமனை ஒன்றில் பணியாளராக வேலைபார்த்துக்கொண்டே , போக்குவரத்து காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் காலை மாலை நேரங்களில் கையில் stop போர்டுடன், விசில் ஊதி சுறுசுறுப்புடன் செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்துகிறார் இவரது தன்னலமற்ற சேவைக்கு பாராட்டு குவிகிறது