ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சிசிடிவி கேமராக்களை சீரமைக்க ஏணி இல்லாததால் போலீஸ் வாகனத்தின் மீது ஏறி பழுது
September 6, 2019 • M.Divan Mydeen

சென்னையில் மழையால் இயங்காமல் உள்ள சிசிடிவி கேமராக்களை சரி செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ஏணி இல்லாததால் போலீஸ் வாகனத்தின் மீது ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை முழுவதும் சுமார்இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்களை பொதுமக்கள் உதவியால் காவல் துறையினர் அமைத்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை மற்றும் சமூக விரோதிகளால் இயங்காமல் உள்ள சிசிடிவி கேமராக்களை தனியார் ஊழியர்களை கொண்டு பழுதுபார்க்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அமைக்கபட்டுள்ள கேமராக்களில் இருந்து காட்சிகள் அந்தந்த பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது. இந்த வசதிக்காக தொழில் நுட்ப உபகரணங்கள் சிலவும் சிசிடிவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் மழையில் நனையாமல் இருக்க பெட்டிகளில் வைத்து அமைத்து வருகின்றனர். தனியார் ஊழியர்களை கொண்டு இந்த பணிகளை மேற்கொள்ளும் போலீசார் சாலையோரம் தங்களது வாகனத்தை நிறுத்தி அதன் மீது நின்று பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.