ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சில்லரை நாணயங்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாமல்நிர்வாகம் திணறி வருகிறது
August 25, 2019 • M.Divan Mydeen

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேக்கமடைந்துள்ள 15 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள சில்லரை நாணயங்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாமல் தேவஸ்தான நிர்வாகம் திணறி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, உள்ளூர், வெளியூர், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கைகளை, ரூபாய் நோட்டுகளாகவும் சில்லரையாகவும் செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் அளித்துள்ள காணிக்கை தொகையில், 20 கோடியே 50 லட்சம் சில்லரை நாணயங்களை வங்கிகளில் டெபாசிட் செய்யமுடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் தடுமாறி வந்தனர். சில்லறை நாணயங்களை வங்கிகள் ஏற்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்ததை அடுத்து, முதற்கட்டமாக 5 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்லரை நாணயங்களை, பல்வேறு வங்கிகளில் தேவஸ்தான அதிகாரிகள் டெபாசிட் செய்துள்ளனர். எனினும் சுமார் 15 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்லரை நாணயங்கள் தேக்கமடைந்துள்ளன. அவற்றையும் வங்கிகளில் டெபாசிட் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.