ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சில தினங்களுக்கு முன்பு சரவணா செல்வரத்னம் ஸ்டோரில் நெய், ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடியதால்ரகளை செய்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
August 6, 2019 • M.Divan Mydeen

திருநெல்வேலி: ஹார்லிக்ஸ் திருடி மாட்டிக்கொண்டதால் அரிவாளுடன் தகராறில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, தாழையூத்தை சேர்ந்தவர் முருகானந்தம் 47. சில தினங்களுக்கு முன்பு சரவணா செல்வரத்னம் ஸ்டோரில் நெய், ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடியதால் பாதுகாவலர்கள் பிடித்துக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தலங்களில் பரவியது. ஆத்திரமுற்ற முருகானந்தம் மற்றும் உறவினர்கள் இருவர் வந்து ஜவுளிக்கடையில் நீண்ட அரிவாள்களுடன் வந்து கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். யாரையும் வெட்டுவோம் என ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடை நிர்வாகி தந்த புகாரின் பேரில், மேலப்பாளையம் போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர். விசாரணையின்போது அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் வலது கை முறிந்தது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவர் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க துணைகமிஷனர் சரவணன் பரிந்துரைத்தார். அவரை ஒரு ஆண்டுக்கு வெளியே வரமுடியாதபடி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.