ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சீன அதிபர் ஹெலிகாப்டரில் ஏற மறுப்பு
October 12, 2019 • M.Divan Mydeen

சென்னை: பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் திருவிடந்தை சென்றார். அங்கிருந்து காரில், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.அங்கு, இரவு தங்கினார்.அதே ஓட்டலில், சீன அதிபர் தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், சீன அதிபர், அங்கு தங்குவதை, சீன பாதுகாப்பு அதிகாரிகள் விரும்பவில்லை. அதைத் தொடர்ந்து, சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவிடந்தை செல்ல, இந்திய தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது; அதையும், சீன அதிகாரிகள் ஏற்கவில்லை. சீன தலைவர்கள், ஹெலிகாப்டரில் பயணம் செய்வதில்லை என்பதை கொள்கையாக வைத்துள்ளதாக தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, காரில் அவர், மாமல்லபுரம் செல்ல முடிவானது