ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற 6 பேர் சிறையிலடைப்பு
September 13, 2019 • M.Divan Mydeen

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரை சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பி, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட காரணமான முகவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர். நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துலிங்கம் என்ற அந்த முகவர் 6 பேரிடமும் தலா ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பணியில் சேர்ந்த பின் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறி சுற்றுலா விசாவில் அவர்களை மலேசியா அனுப்பியதாகவும் தெரிகிறது. மலேசியா சென்று 9 மாதங்களாகியும் விசா மாற்றப்படாத நிலையில், 8 பேரும் மலேசிய போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தற்போது சிறையிலுள்ள அவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், மோசடி முகவர் முத்துலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். சுற்றுலா விசாவில் வேலைக்குச் செல்ல ஒப்புக்கொண்டதே தவறு என்று கூறும் போலீசார், மோசடி முகவர் குறித்து முன்னரே புகாரளித்திருக்க வேண்டும் என்கின்றனர்.