ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சுஷ்மா சுவராஜ் மறைவு
August 7, 2019 • M.Divan Mydeen

https://youtu.be/bPfqHVeKw5Aசுஷ்மா சுவராஜ் (வயது 67) பிப்ரவரி 14-ம் தேதி 1952 ஆண்டு பிறந்தார். சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார் சுஷ்மா சுவராஜ்.நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும் தொடர்புடையவர்.இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.சுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார். 1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.மே 2008 - 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார். வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை . பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் (வயது 66). கடந்த பா.ஜனதா ஆட்சியில் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 10.20 மணிக்கு சுஷ்மா சுவராஜை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.வக்கீலான இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் டெல்லி மாநில முதல்-மந்திரியாகவும் இருந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியதும் பிரதமர் நரேந்திரமோடிக்கு சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், நன்றி பிரதமர் அவர்களே, இந்த நாளுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதுவே அவரது கடைசி வாழ்த்தாக மாறி விட்டது.கடந்த 2016-ம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டார். சுஷ்மா சுவராஜ் நேற்று திடீரென மரணம் அடைந்தார்.