ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சென்னையில் இலகு ரயில் சேவை தொடங்க ஆலோசனை...
October 7, 2019 • M.Divan Mydeen

சென்னையில் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், என 2 விதமான ரயில் சேவைகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மேலும் மூன்றாவதாக இலகு ரக ரயில் சேவையையும் தொடங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. "லைட் ரயில்" என அழைக்கப்படும் இந்த சேவை, சிங்கப்பூர், சிட்னி, ஒட்டாவா, சான் பிரான்சிஸ்கோ போன்ற வெளிநாட்டு நகரங்களில், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இத்திட்டத்தை தாம்பரம் - வேளச்சேரி இடையே அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை காட்டிலும், இலகு ரக ரயில் சேவை திட்டத்திற்கு, குறைந்த அளவிலான செலவே ஆகும் என கூறப்படுகிறது. இலகு ரக ரயில் திட்டம் குறித்து, சென்னை மெட்ரோ நடத்தியுள்ள ஆய்வின் விபரங்கள், மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.